அழகிய மகளுடன் நடிகை கெளதமி!

அழகிய மகளுடன் நடிகை கெளதமி!

மகளுடன் எடுத்த அழகான புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை கெளதமி. 
Published on

தனது மகளுடன் எடுத்த புதிய படத்தை இன்ஸ்டகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை கெளதமி. 

கெளதமி மற்றும் அவருடைய முன்னாள் கணவர் சந்தீப் பாட்டியாவுக்குப் பிறந்தவர் சுபலட்சுமி. தனது கணவரை 1999-ல் பிரிந்தார் கெளதமி. பிறகு கமல் ஹாசனுடன் இணைந்து வாழ்ந்தார். பிறகு இருவரும் 2016-ல் பிரிந்தார்கள். 

2018-ல் இயக்குநர் பாலா படத்தில் கெளதமியின் மகள் சுபலட்சுமி நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியானபோது உடனடியாக அதை மறுத்தார் கெளதமி.

சுபலட்சுமி தனக்கென ஒரு இன்ஸ்டகிராம் கணக்கு வைத்துள்ளார். அதில் அவ்வப்போது படங்களைப் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில் மகளுடன் எடுத்த அழகான புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை கெளதமி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com