பிரபாஸின் ஆதிபுருஷ்... இதெல்லாம் கிராபிக்ஸா? நெட்டிசன்கள் கிண்டல்
ஆதிபுருஷ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டு வருகின்றன.


ஆதிபுருஷ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டு வருகின்றன.
’பாகுபலி 2' படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
’தன்ஹாஜி’ படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ்.
இதையும் படிக்க: முறுக்கு மீசையுடன் கமல்! வைரலாகும் புகைப்படம்
2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது. ஆதிபுருஷ், 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இலங்கைக்குச் சென்று சீதாவை மீட்கும் ராமரின் கதையான இப்படம் முழுக்க கிராபிக்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் விஎஃப்எக்ஸ்(vfx) தரம் குழந்தைகளுக்கான கார்டூன் தரத்தில் இருப்பதால் இணையத்தில் இந்த டீசர் கடுமையான விமர்சனங்களையும் கிண்டலையும் சந்தித்து வருகிறது.
மேலும் இப்படம் ரூ.500 கோடியில் உருவானதாகக் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...