
ரூ.400 கோடி வசூல் குறித்து நடிகர் பார்த்திபன் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில் இன்னும் சில நாளகளில் ரூ.500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் ரூ.163 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்து அமெரிக்காவில் அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நடிகர் தனுஷூடன் இணையும் சூப்பர் ஸ்டார்!
அதில், Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100! என்று பதிவிட்டுள்ளார்.
Crosses-400
â Radhakrishnan Parthiban (@rparthiepan) October 13, 2022
Crores!!!!
à®à®¨à¯à®¤à¯ à®à®©à¯à®± மதமà¯
à®à®©à¯à®±à¯
à®à®¨à¯à®¤à¯ à®à®©à¯à®± பிரà®à¯à®à®©à¯à®¯à®¾à®
மதமà¯à®®à®¾à®±à®¿ விà®à¯à®à®¤à¯!
à®à®¨à¯à®¤ à®à®´à¯à®¤à¯à®¤à¯à®®à¯ à®à®¤à¯ à®à®°à¯
பிரà®à¯à®à®©à¯à®¯à¯ à®à®´à¯ (à®)பà¯à®ª லாமà¯!
à®à®´à¯ பà¯à®ªà®¿à®©à®¾à®²à¯ â¦
à®à®©à¯à®©à¯à®®à¯ à®à®°à¯ 100!
அதாவது, இந்து மதம் என்ற சர்ச்சையால் பொன்னியின் செல்வன் ரூ.400 கோடி வசூலித்துவிட்டது. மேலும் இந்த விவாதம் வலுத்தால் மேலும் ரூ.100 கோடியை வசூலிக்கும் என்று நடிகர் பார்த்திபன் மறைமுகமாக சொல்கிறாரா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








