கார்டூன் நெட்வொர்க் மற்றும் சுட்டி டிவி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய கால குழந்தைகளுக்கு பொழுதுபோக்குவதற்காக செல்போன் கேம்ஸ்கள் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. நிறைய கார்டூன் சேனல்களும் வந்துவிட்டன. ஆனால் 90களின் குழந்தைகளுக்கு கார்டூன் தொலைக்காட்சி என்றாலே அது கார்டூன் நெட்வொர்க் மட்டும்தான்.
ஸ்கூபி டு, பவர்பஃப் கேர்ள்ஸ், டாம் அண்ட் ஜெர்ரி, பாப்பாய் போன்ற பல கார்டூன் தொடர்கள் குழந்தைகளை குதூகலத்துடன் வைத்திருக்க உதவியது. முதல் நாள் இந்தத் தொடர்களைப் பார்த்துவிட்டு மறுநாள் பள்ளியில் நண்பர்களுடன் இதுகுறித்து உரையாடுவதில் ஒரு அலாதி மகிழ்ச்சி இருக்கும்.
இதையும் படிக்க | நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு திருமணமா?
கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபரில் தான் தனது ஒளிபரப்பைத் துவங்கியது. இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இதே அக்டோபரில் தனது ஒளிபரப்பை நிறுத்தவுள்ளது. கார்டூன் நெட்வொர்க் சேனல் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் இணையவுள்ளதாக தகவல்.
இதே போல தமிழில் முதன்முறையாக குழந்தைகளுக்கென்றே அறிமுகமான சுட்டி டீவியும் விரைவில் தனது ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவர் - 173 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை; இந்திய அணிக்கு தேர்வானது குறித்து சூர்யவன்ஷி!

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை வைத்திருப்பது குற்றமா?

6/32: உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 6 அணிகள்!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46



