நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரான ஜாக்கி பக்னானியுடன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகியாக நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த அயலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார். கடந்தாண்டு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போதிலிருந்தே இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.
தற்போது இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாக சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் ரகுல் ப்ரீத் சிங் அதனை மறுத்துள்ளார்.
அவரது சகோதரர் அவரது திருமணத்தைப் பற்றி கூறியதாக சொல்லப்பட்ட தகவலுக்கு, “என்னுடைய வாழ்க்கைப் பற்றிய செய்தி எனக்கே தெரியவில்லை” என நகைச்சுவையாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
@AmanPreetOffl you confirmed ? Aur mujhe bataya bhi nahi bro .. itâs funny how I donât have news about my life .. https://t.co/ZSZgNjW2BW
â Rakul Singh (@Rakulpreet) October 12, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மீண்டும் இணையும் டிசி கூட்டணி!

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly
ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் டிரைலர் அறிவிப்பு!

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



