மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து பிரபலத்தின் கருத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படம் குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ''ஒரு கதையைப் பெரிய திரையில் பிரம்மாண்டமாக காட்டியதற்கு பெருமைப்பட வேண்டும். பொன்னியின் செல்வன் மக்களை தங்களது சொந்த வரலாற்றை திரையில் காட்டியிருக்கிறது. இந்தப் படம் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. மணிரத்னம் உயர்ந்து நிற்கிறார்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ''பத்து தல'' - முக்கிய அப்டேட் கொடுத்த சிம்பு
மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, திருடா திருடா, அலைபாயுதே, ஓகே கண்மணி என மணிரத்னம் - பி.சி.ஸ்ரீராம் இணைந்து தமிழ் சினிமாவில் புது திரைமொழியில் கதை சொல்லி கவனம் ஈர்த்தார்கள்.
பொன்னியின் செல்வன் இதுவரை ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக அளவில் அதிகம் வசூலித்த படங்களில் பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கிறது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்குவரவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிகரிக்கும் ராகிங் புகார்கள்: முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடி அதிகரிப்பு

சித்தார்த் - அதிதி ராவ் தம்பதியினரின் சமீபத்திய க்ளிக்ஸ்

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



