பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரியல் 'கேஜிஎஃப்' ! பா.ரஞ்சித் - சீயான் விக்ரமின் 'தங்கலான்' டீசர் உருவாக்கிய சர்ச்சை

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் பட டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Published On :

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் பட டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் தலைப்பு அறிமுக விடியோ நேற்று (அக்டோபர் 23) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு தங்கலான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை இந்தப் படம் பேசுவதாக கூறப்படுகிறது. டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறும் கதை என டீசர் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

பொதுவாக பா.ரஞ்சித் படங்கள் வெளியானால்தான் சர்ச்சை உருவாகும் தற்போது தலைப்பு அறிவிப்பு டீசரிலேயே சர்ச்சை உருவாகியுள்ளது. டீசரில் நடிகர் பசுபதி பிராமணர் போல காட்சியளிக்கிறார்.

இதனையடுத்து பிராமணர் வில்லனாக காட்டப்படவுவதாக சலசலப்பு எழுந்தது. மற்றொருபுறம் டீசரை வைத்து முடிவுக்கு வருவது தவறு என ஆதரவான குரல்கள் எழுவதையும் பார்க்க முடிகிறது..  

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் பார்வதி நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.