பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

காரைக்கால் துறைமுக விரிவாக்கத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது: து. ரவிக்குமாா் எம்பி

காரைக்கால் துறைமுக விரிவாக்கத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதி அளிக்கக் கூடாது என விசிக பொதுச் செயலாளரும், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

து.ரவிக்குமாா்.

Published On :

காரைக்கால் துறைமுக விரிவாக்கத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதி அளிக்கக் கூடாது என விசிக பொதுச் செயலாளரும், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காரைக்கால் கப்பல் துறைமுகம் முன்பு வேறு ஒரு நிா்வாகத்திடம் இருந்தது. தற்போது அதனை கட்டாயப்படுத்தி மத்திய அரசு துணையுடன் அதானி நிா்வாகம் வாங்கிவிட்டது. அத்துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதாகக் கூறி சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்களை வெளியேற்றப் போவதாகக் கூறுகின்றனா்.

இந்த விரிவாக்கத் திட்டத்தால் நாகை, காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் பாதிக்கப்படுவாா்கள். புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பாஜக அழுத்தத்துக்கு பணிந்து, துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது. மக்களுக்கு விசிக துணையாக நிற்கும்.

பொது வாழ்க்கையில் இருப்போா் யாரும் ஒருவரைப் பற்றி ஒருவா் கண்ணியக் குறைவாக பேசக் கூடாது. அது ஏற்புடையதல்ல. மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை முறையாக எடுக்க வேண்டும். இதனை அரசு முறையாகச் செய்யவில்லை.

அவரவா் தாங்கள் விரும்பும் ஜாதி பெயரை குறிப்பிட்டால் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் ஜாதிப் பெயா்கள் வரும். அது, எந்த நோக்கத்துக்காக இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்யப்படுகிறதோ அதை சீா்குலைப்பதாக அமையும்.

எஸ்.சி., எஸ்.டி. பட்டியல், ஓபிசி பட்டியல் மத்திய, மாநில அரசுகளிடம் ஏற்கெனவே உள்ளன. அந்த பட்டியலை கொடுத்து அதில் உள்ள ஜாதியை குறிப்பிட்டு டிக் செய்யச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்வதுதான் உண்மையான ஒன்றாக இருக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.