கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிவகார்த்திகேயனுடன் மோதும் மிஷ்கின்

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :25 அக்டோபர் 2022, 10:08 am

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி வெளியாகி கலவவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ச்சியாக டாக்டர், டான் என இரண்டு வெற்றிப்படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்திருந்த நிலையில் பிரின்ஸ் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. 

இதனால் அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துவரும் மாவீரன் வெற்றிப்படமாக அமைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மாவீரன் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கிறார். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்கிறாராம். தற்போது மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துவிட்டு தனது தம்பி ஆதித்யா இயக்கும் டெவில் படத்துக்கு இசையமைக்கிறார். 

சிவகார்த்திகேயனும் பிரின்ஸ் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்தார். விரைவில் இருவருக்குமான காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.