தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
'என்ஜிகே' படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மேலும் தற்போது, இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | சீமான் படத்துக்கு தமிழக அரசு விருது
இந்நிலையில், இப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
நானே வருவேன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பு - எஸ்.தாணு.