தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அவசரமாக ஹெலிஹாப்டரில் கிளம்பும் நடிகர் அஜித் - வைரலாகும் விடியோ

நடிகர் அஜித் ஹெலிஹாப்டரில் ஏறி செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.   

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 9:49 am

DIN

நடிகர் அஜித் ஹெலிஹாப்டரில் ஏறி செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நடிகர் அஜித் குமார் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். 

போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ஏகே 61 வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்தப் படத்திலிருந்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதன் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு டிசம்பருக்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. 

அவ்வப்போது நடிகர் அஜித் பைக் பயணம் செல்லும் புகைப்படங்கள், துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி  அப்டேட் இல்லாமல் கவலையில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துவருகின்றன. 

இந்த நிலையில் தற்போது ஹெலிஹாப்டரில் அஜித் ஏறி செல்லும் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஹெலிஹாப்டர் மூலம்  அவர் ஏகே 61 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.