இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அறுவைச் சிகிச்சைக்கு தயாராகும் பூஜா ஹெக்டே! இதுதான் காரணமா?

பிரபல நடிகை பூஜா ஹெக்டே விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
பூஜா ஹெக்டே.
Updated On :1 பிப்ரவரி 2024, 10:26 am

DIN

பிரபல நடிகை பூஜா ஹெக்டே விரைவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ’முகமூடி’ படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.

குறிப்பாக, அவர் நடிப்பில் வெளியான ‘அல வைகுந்தபுரம்லு’ ’ராதேஷியாம்’ உள்ளிட்ட படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன. நீண்ட இடைவேளைப் பின் தமிழிலும் நடிகர் விஜய் உடன் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும், ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய தோல்விப்படமாகவும் அமைந்துவிடுவதால் அவர் ராசி இல்லாத நடிகை என்றே சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இந்நிலையில், பூஜா ஹெக்டே தன்னை மேலும் அழகுப்படுத்திக் கொள்வதற்காக தன் மூக்கினை அறுவைச் சிகிச்சை மூலம் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒல்லியான தோற்றத்தில் இருந்தாலும் பூஜாவின் மூக்கு சற்று நீளம் என்பதால் இந்த முடிவினை அவர் எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த தமிழ் நடிகையான ஸ்ரீதேவி பாலிவுட் படங்களில் நடிக்கத் துவங்கியதும் தன் மூக்கின் தோற்றத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி அறுவைச் சிகிச்சைக்கு முன், பின்

ஸ்ரீதேவி அறுவைச் சிகிச்சைக்கு முன், பின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.