'பீஸ்ட்' படத்துக்கு குவைத்தில் தடை ? வெளியான அதிர்ச்சி காரணம்

'பீஸ்ட்' படத்துக்கு குவைத்தில் தடை ? வெளியான அதிர்ச்சி காரணம்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்துக்கு குவைத்தில் தடைவிதிக்கப்ப்டடுள்ளதாக கூறப்படுகிறது. 
Published on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் ஹிந்தி டிரெய்லரை நடிகர் வருண் தவான் வெளியிட்டு, 'நான் ஒரு பெரிய விஜய் ரசிகன்' என்று தெரிவித்தார். 'பீஸ்ட்' ஹிந்தி டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. 

'பீஸ்ட்' படத்தின் தெலுங்கு டிரெய்லர் இன்று (ஏப்ரல் 5) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. மேலும் அரபிக் குத்து பாடலின் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்த நிலையில் 'பீஸ்ட்' படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பீஸ்ட்' படத்தில் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளும், அதிக வன்முறையும் இருப்பதால் பீஸ்ட் படத்தை தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

'பீஸ்ட்' படத்துடன் 'கேஜிஎஃப் 2' திரைப்படமும் வெளியாவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கேஜிஎஃப் நாயகன் யஷ், இரண்டு படங்களுக்கும் போட்டி என்பதல்ல. கேஜிஎஃப் படத்தையும் பாருங்கள். பீஸ்ட் படத்தையும் பாருங்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com