
தனது மகளின் படத்தை நடிகை பிரணிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரணிதா. இவர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு மே மாதம் தொழிலதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்துகொண்டு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
இதையும் படிக்க | விவாதிக்க நான் தயார் - அறிவின் குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்
இந்த நிலையில் முதன்முறையாக குழந்தையின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரணிதா பகிர்ந்துள்ளார். தன் குழந்தைக்கு ஆர்ணா எனப் பெயரிட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனயைடுத்து பிரணிதாவின் மகள் மிக அழகாக இருப்பதாக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.