பிக்பாஸ் வீட்டில் அதிர்ஷ்டத்தில் இருக்கிறாரா ரச்சிதா?: பெருகும் ரசிகர்கள் ஆதரவு 

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் ரச்சிதா கவலையில் இருப்பதால் அவரது பெயரினை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
பிக்பாஸ் வீட்டில் அதிர்ஷ்டத்தில் இருக்கிறாரா ரச்சிதா?: பெருகும் ரசிகர்கள் ஆதரவு 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், செரினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 

சீசன் 6ஆம் நாளில் 64வது எபிசோடில் ரச்சிதாவுக்கு அதிர்ஷ்டத்தில் இருக்கிறாரென பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டமளித்தனர். ஆனால் ரச்சிதா தனது சொந்த உழைப்பினால் மூலமே இவ்வளவு நாள் வந்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மேலும் 65வது நாளில் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமைக்கும்போதும் நேற்றைய லக்கி என்ற பரிசளிப்பு சம்பவத்தால் மனத்தால் கவலையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இனிமேல் ரச்சிதா சமைக்கவே கூடாதெனவும் ரச்சிதாவுக்கு எங்கள் ஆதரவு இருக்கும் எனக்கும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ட்விட்டரில் பிக்பாஸ் பார்வையாளர்கள் ரச்சிதா எனும் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com