ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காதல், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் ‘லத்தி’ டிரைலர் வெளியானது! 

விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லத்தி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2022, 12:22 pm

DIN

‘வீரமே வாகை சூடும்’ படத்தக்கு பிறகு லத்தி என்ற படத்தில் விஷால் நடித்துவருகிறார். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். வினோத் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

லத்தி திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. பின்னர், சில பிரச்னைகள் காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

இப்படம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.