
படம் - www.instagram.com/priyaatlee/
பிரபல இயக்குநர் அட்லியும் நடிகை ப்ரியாவும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். 2013-ல் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, அதன்பிறகு தெறி, மெர்சல், பிகில் ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கினார். தற்போது ஷாருக் கான் நடிப்பில் ஜவான் என்கிற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டகிராமில் மகிழ்ச்சிகரமான செய்தியைப் பகிர்ந்துள்ளார் ப்ரியா. நான் கர்ப்பமாக உள்ளேன். அனைவருடைய ஆசிர்வாதங்களும் தேவை என்று கூறியுள்ளார். திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் அட்லி மற்றும் ப்ரியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.