
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
'கனெக்ட்' திரைப்படத்திம் சிறப்பு காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. நடிகை நயன்தாரா, அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் மற்றும் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: தங்கலான் படத்திற்காக கடுமையாக பயிற்சி செய்யும் மாளவிகா?
சிறப்பு காட்சிக்கு பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன், "முதன்முதலாக இடைவெளி இல்லாத ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். டிசம்பர் 22 ஆம் தேதி 300 திரையரங்குகளில் வெளியாகும். நல்லவிதமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தைகளை நயன்தாரா நன்றாக பார்த்து கொள்கிறார்" என்று தெரிவித்தார்.