பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர், முருகதாஸ் கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசை சி.சத்யா. ஒளிப்பதிவு சக்திவேல். பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் கடந்த 2019இல் வெளியான நிலையில் 3 வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பட வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், ப்ரோமஷனுக்காக புதிய விடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. இதற்கு ரசிகர்கள், “மெழுகு டாலு நீ”, “வயசானாலும் அழகு குறையவில்லை” என கருத்து தெரிவித்து வருகின்றனர். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ரஞ்சிதமே பாடலின் நடன அசைவுகள் போல முத்தமிட்டார். இதன் படங்களை வைத்து எடிட் செய்து த்ரிஷாவின் அழகிற்கு மீம்ஸாக கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
தளபதி 67 படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் வாரிசு படத்திற்கு த்ரிஷா வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
When in doubt,move⦠pic.twitter.com/tyCPpQg44b
â Trish (@trishtrashers) December 26, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தி ஒன் ரூல் - விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் புதிய பாடல் வெளியீடு!

காவிரியில் 18,000 கன அடி நீர்வரத்து! ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தடை

உதயநிதி கைதுக்கு முன் காவல்துறையினருடன் நடந்த வாக்குவாதம்! | DMK | TVK

உதயநிதி கைது! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான அன்பில் மகேஷ்!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



