தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல ஹீரோ படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ்

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல ஹீரோ படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :10 ஜனவரி 2022, 7:08 am

DIN

தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது கௌதம் மேனன் இசையில் கடந்த சில வருடங்களாக எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் இசையமைக்கும் படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

ஜெயம் ரவி அடுத்ததாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களின் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

Story image

முன்னதாக ஜெயம் ரவியின் தாம் தூம், எங்கேயும் காதல், வனமகன் போன்ற படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தற்போது 4வது முறையாக இருவரும் இணையவுள்ளனர்.

ராஜேஷ் இயக்கத்தில் வெளியான கடந்த சில படங்கள் போதிய படங்கள் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் பெரும் தோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.