பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

'''20 ஆண்டுகளில் இப்படி ஒரு கதையைக் கேட்கவில்லை'': வியந்த நடிகர் விஜய்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு சுவாரசியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். 

Published On :

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை விஜய் பாடியுள்ளார். இந்த பாடல் குறித்து அறிவிக்கும் ப்ரமோ விடியோவில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன், அனிருத் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகவும், அந்த விடியோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பீஸ்ட் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். வம்சி இயக்குகிறார். இயக்குநர் வம்சி ஏற்கனவே நடிகர் கார்த்தி - நாகர்ஜுனா இணைந்து நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார். 

இந்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு சுவாரசியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் குறித்து நடிகர் விஜய், தான் 20 வருடங்களில் இப்படி ஒரு கதையை கேட்கவில்லை எனவும், தனது திரையுலக வாழ்வில் இந்தப் படம் முக்கிய படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளதாக தில் ராஜு பகிர்ந்துள்ளார். 

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.