எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சூர்யா-பாலா கூட்டணி படத் தலைப்பு 'வணங்கான்'

பாலா இயக்கத்தில் சூர்யாவின் 41வது படத்திற்கு 'வணங்கான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :11 ஜூலை 2022, 1:37 pm

DIN

பாலா இயக்கத்தில் சூர்யாவின் 41வது படத்திற்கு 'வணங்கான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகின்றார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார். 

ஜோதிகாவுடன் இணைந்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 28 பூஜையுடன் துவங்கியது. 

இந்த படத்திற்கு சூர்யா 41 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இயக்குநர் பாலாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில், படத்திற்கு 'வணங்கான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.