விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதாஒருநாள் மழைக்கே சென்னை மாநகரமே தத்தளிக்கிறது: தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்தொடர் விடுமுறை: சென்னை மாநகர் பேருந்துகளில் 3 நாள்களில் 4.15 லட்சம் பேர் பயணம்!சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்!

வில்லனாகவும் நடிக்கத் தயார்: அருண் விஜய்

நல்ல கதாபாத்திரம் இருந்தால் வில்லனாகவும் நடிக்கத் தயாராகவிருப்பதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

Updated On :

நல்ல கதாபாத்திரம் இருந்தால் வில்லனாகவும் நடிக்கத் தயாராகவிருப்பதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

சேலம் பிரபாத் அருகே உள்ள கே.எஸ்.திரையரங்கில் ரசிகர்களுடன் யானை திரைப்படத்தின் டிரைலரை படத்தின் நாயகன் அருண் விஜய், இயக்குநர் ஹரி ஆகியோர் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், வரும் 17 ஆம் தேதி வெளியாகும் யானை திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். 

நல்ல கதாபாத்திரம் இருந்தால் வில்லனாகவும் ஹீரோவாகவும், ஏற்று நடிக்கத் தயாராக உள்ளேன். யானை படத்திற்கு வரும் அடுத்தடுத்த படங்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க இருக்கிறேன். திரைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறுவது அவர்கள் எடுத்துகொள்ளும் விதம்தான்.

திரைப்படத்தில் வரும் நல்ல கருத்துக்களை தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அது நடக்கும் எதிரான விஷயங்களை வைத்து தங்களை மாற்றிக் கொள்வது நல்லதல்ல. கரோனா தொற்றுக்கு பிறகு திரைத்துறை பழைய நிலைமைக்கு வந்துள்ளது. புதிய புதிய படங்கள் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசும் திரைதுறையினருக்கும் மேலும் உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.