ஜென்டில்மேன் 2 இயக்குநர் யார்?: அறிவித்தார் குஞ்சுமோன்

ஜென்டில்மேன் 2 படம் பற்றிய புதிய அறிவிப்பை குஞ்சுமோன் வெளியிட்டுள்ளார்.
ஜென்டில்மேன் 2 இயக்குநர் யார்?: அறிவித்தார் குஞ்சுமோன்

ஜென்டில்மேன் 2 படத்தின் இயக்குநர் பற்றிய தகவலை இன்று வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.

அர்ஜூன், மதுபாலா நடிப்பில் ஏ,ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கிய முதல் படம் - ஜென்டில்மேன். 1993-ல் வெளியான இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்தார். பிறகு காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற பிரமாண்டப் படங்களைத் தயாரித்து 90களில் பிரபலமான தயாரிப்பாளராக விளங்கினார். 1999-ல் என்றென்றும் காதல் படத்தைத் தயாரித்ததுடன் அவர் வேறு படங்களைத் தயாரிக்கவில்லை.

21 வருடங்கள் கழித்து கடந்த 2020-ல் மீண்டும் படம் தயாரிக்க முடிவெடுத்தார். ஜென்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஜென்டில்மேன் 2 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் என அறிவித்தார். நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் போன்ற நடிகைகள் நடிக்கிறார்கள். இசை - கீரவாணி. 

இந்நிலையில் ஜென்டில்மேன் 2 படம் பற்றிய புதிய அறிவிப்பை குஞ்சுமோன் வெளியிட்டுள்ளார். ஜென்டில்மேன் 2 படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்குவார் என இன்று அவர் அறிவித்துள்ளார். கோகுல் கிருஷ்ணா, இதற்கு முன்பு ஆஹா கல்யாணம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com