தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாஸ்டர் ’குட்டி ஸ்டோரி’ புதிய சாதனை

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ’குட்டி ஸ்டோரி’ பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2022, 5:39 am

DIN

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ’குட்டி ஸ்டோரி’ பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் 2021, ஜனவரி 13 அன்று பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

அனிருத் இசையமைப்பில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே பெரிய ‘ஹிட்’ஆனது.  குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல்  30.3 கோடி பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அப்படத்தின் இடம் பெற்றிருந்த ‘குட்டி ஸ்டோரி’ பாடல் 10 கோடி(100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதுவரை மொத்தம் 11 லட்சம் பேர் இந்தப் பாடலுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.