கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரஜினியுடன் கமல் சந்திப்பு

நடிகா் ரஜினிகாந்துடன் கமல் சந்தித்த புகைப்படம் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :31 மே 2022, 5:26 am

DIN

நடிகா் ரஜினிகாந்துடன் கமல் சந்தித்த புகைப்படம் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

‘கைதி’, ’மாஸ்டா்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடா்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகா்கள் நடித்துள்ளனா். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. 8 மாதங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளாா். கமல்ஹாசனைப் பொருத்தவரை அவா் கடைசியாக 2018-ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தாா். அதன்பின் அரசியலுக்கு திரும்பியவா், படத்தில் நடிப்பதிலிருந்து விலகியிருந்தாா். அதன்பின், தற்போது 4 ஆண்டுகள் கழித்து அவருடைய படம் வெளியாக உள்ளதால் ரசிகா்கள் பெரும் எதிா்பாா்ப்புடன் படத்தை எதிா்நோக்கியுள்ளனா்.

ஜூன் 3-ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், நடிகா் ரஜினிகாந்தை கமல்ஹாசன் நேரில் சந்தித்துள்ளாா். இயக்குநா் லோகேஷ் கனகராஜும் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியுள்ளாா். இது தொடா்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டா் பக்கத்தில், ’ரஜினி, கமல்ஹாசன் இருவருக்கும் நன்றி. ‘உங்கள் இருவரின் நட்பு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.