கலகத் தலைவன் திரைப்படத்தின் ‘ஹே புயலே’ பாடல் வெளியீடு 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவர் திரைப்படத்தின் ஹே புயலே பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன். 

இந்தத் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்துக்கு இசையமைக்கின்றனர். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஹே புயலே பாடலை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர். ஸ்ரேயா கோஷல், சத்ய பிரகாஷ் பாடியுள்ள இந்தப் பாடலை கார்க்கி எழுதியுள்ளார். 

இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com