
பிரபல நடிகர் பிரபாஸும் ஹிந்தி நடிகை ஒருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி, பாகுபலி 2 என வரிசையாக ஹிட் படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா படங்களாக ரிலீஸ் செய்து வசூல் வேட்டை நடத்துகிறது. இதனால், இவரின் சம்பளமும் ரூ. 100 கோடியாக உயர்த்தியுள்ளார்.
இவர், தற்போது நடித்து வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றதால், மீண்டும் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு, கிராபிக்ஸ் சரி செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், ஆதிபுருஷ் படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளி போயுள்ளன.
ராமாயண கதையை மையமாக எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், சீதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கிருத்தி சனோனும் நடித்துள்ளனர்.
இந்த படப்பிடிப்பின் போது, இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, சில நாள்களுக்கு முன்பு கிருத்தி சனோன் பேட்டி ஒன்றில், பிரபாஸை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே பாகுபலி நாயகி அனுஷ்காவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கிசுகிசு பரவி ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.