தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விரைவில் திரிஷ்யம் 3?

திரிஷ்யம் மூன்றாம் பாகத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகள் தயாராகிவிட்டதாக இயக்குநர் ஜித்து ஜோசப் தெரிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published On :

திரிஷ்யம் மூன்றாம் பாகத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகள் தயாராகிவிட்டதாக இயக்குநர் ஜித்து ஜோசப் தெரிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘திரிஷ்யம்’ , ‘திரிஷ்யம் 2’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படம் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஹிந்தி, சீன மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில், திரிஷ்யம் 3-ஆம் பாகத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகள் தயாராகிவிட்டதாகவும், விரைவில் படமாக்கப்படும் என்றும் படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி, திரிஷ்யம் 3 உருவாகும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இயக்குநர் உறுதி செய்துள்ளார்.

முதல் இரண்டு பாகங்களில், தனது மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் காவல்துறை அதிகாரியின் மகனை அடித்துக் கொன்றுவிட்டு அந்த குற்றத்தை மறைத்திருந்த நிலையில், மூன்றாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.