
கோமாளி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக தானே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம் லவ் டுடே. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே சாச்சிட்டாளே என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது என்னை விட்டு என்ற பாடலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப் பாடலை பிரதீப் ரங்கநாதன் எழுதியுள்ளார்.
லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடிக்க, ராதிகா, யோகி பாபு, ரவீனா, ஃபைனலி பரத், ஆதித்யா கதிர், ஆஜித், விஜய் வரதராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ் புருஷோத்தமன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் டிரைலரை நாளை இரவு 7.02 மணிக்கு நடிகர் சிம்பு வெளியிடப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
We are excited to let u know #Lovetoday Trailer will be released by #Atman #STR @SilambarasanTR_ on 5TH Oct @7:02 PM @Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @pradeeponelife @thisisysr @archanakalpathi @aishkalpathi @venkatmanickam5 pic.twitter.com/Re9f0vAaGK
— Pradeep Ranganathan (@pradeeponelife) October 4, 2022