எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வசூலில் தடுமாறும் விக்ரம் வேதா... இதுவரை இவ்வளவுதானா?

ஹிந்தி விக்ரம் வேதா படம் முதல்  வசூலில் தடுமாற்றம் அடைந்து வருகிறது.

Published On :

ஹிந்தி விக்ரம் வேதா படம் முதல்  வசூலில் தடுமாற்றம் அடைந்து வருகிறது.

விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படம் 2017-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்கள். 

ஹிருதிக் ரோஷன், சயிஃப் அலி கான், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். செப்டம்பர் 30 அன்று இந்தப் படம் வெளியானது. 

விக்ரம் வேதா படத்தைப் பார்த்தவர்கள் நல்லவிதமாக விமர்சனம் செய்திருந்தாலும் இந்தியாவில் முதல் நாளன்று ரூ. 10.58 கோடி வசூலித்தது.  

அதன்பின் விக்ரம் வேதா படத்தை வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முதல் மூன்று நாள்களின் வசூலை வெளியிட்டது. அதில், 2-வது நாளன்று ரூ. 12.51 கோடி, 3-வது நாளன்று ரூ. 13.85 கோடி என மொத்தமாக முதல் மூன்று நாள்களில் விக்ரம் வேதா படத்துக்கு இந்தியாவில் ரூ. 36.94 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், படம் வெளியான 5 நாள்களில் ரூ.50 கோடி வசூலை மட்டுமே எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக பாலிவுட் திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. ஆனால், விக்ரம் வேதா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றும் வசூலில் திணறி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.