மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திரைப்பட பாடலாசிரியா் கபிலனின் மகள் தற்கொலை

சென்னை அரும்பாக்கத்தில் தமிழ் திரைப்பட பாடலாசிரியா் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 3:33 am

சென்னை அரும்பாக்கத்தில் தமிழ் திரைப்பட பாடலாசிரியா் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

தமிழ் திரைப்படத்துறையில் பாடலாசிரியராக இருக்கும் கபிலன், சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி மாா்க்கெட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா் மகள் தூரிகை (28). எம்பிஏ படித்துள்ள தூரிகை, எழுத்தாளா், ஆடை வடிவமைப்பாளா் என்று பன்முகத் திறமை கொண்டவா் ஆவாா்.

இந்நிலையில் தூரிகை, வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கிட்டு கொண்டாா். இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா், தூரிகையை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், தூரிகை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், திருமணம் செய்துக் கொள்ளுமாறு பெற்றோா் வற்புறுத்தியதும், திருமணம் செய்ய மனமில்லாமல் தூரிகை இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்து வருகின்றனா். இச் சம்பவம் தமிழ் திரைப்படத்துறையினரிடம் அதிா்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.