மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சிவகார்த்திகேயனுடன் மோதும் உதயநிதி ஸ்டாலின்? 

நடிகர்கள் சிவகார்த்தியேன்-உதயநிதி இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :18 ஏப்ரல் 2023, 2:45 pm

DIN

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.டாக்டர், டான் வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் ஒப்பந்தமானார். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கிறார்.

மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் இந்த மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல சரிகம சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி படமாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படமும், உதயநிதியின் மாமன்னன் திரைப்படமும் ஜுன் மாதம் 29ஆம் தேதி பக்ரித்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.