கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாவீரன்: இன்று வெளியாகும் முக்கிய அப்டேட்

மாவீரன் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 6:20 am

DIN

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

டாக்டர், டான் வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் ஒப்பந்தமானார். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.

மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் இந்த மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் படக்குழு இன்று முக்கிய அப்டேட் வெளியாகுமென எடிட்டிங்கில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளனர். 

படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அறிவிக்கப்படுமென ரசிகர்கள் ட்விட்டரில் மாவீரன் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.