16 வயதில் சமந்தா: வைரலாகும் புகைப்படம்
நடிகை சமந்தாவின் 16 வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.பின்னர் அதிலிருந்து மீண்டு படங்களில் நடித்து வருகிறார்.
பான் இந்திய படமாக ரிலீஸான சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் ரூ. 50-60 கோடி வசூலானதாக தகவல் வெளியானது. தற்போது சாகுந்தலம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்த வாரம் சிட்டாடல் என்ற இணைய தொடர் வெளியாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தற்போது தான் 16 வயதில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

வரும் 28ஆம் தேதி 36 வயதாக உள்ளது. 20 ஆண்டுகள் இடைவெளியில் எப்படி இருக்கிறார் என சமந்தா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...