நான் வழக்கறிஞர் என்பதால் சீரியஸான ஆள் கிடையாது: அதிதி பாலன் 

அருவி படத்தில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன் சினிமா வாழ்க்கை பற்றி கூறியுள்ளார். 
நான் வழக்கறிஞர் என்பதால் சீரியஸான ஆள் கிடையாது: அதிதி பாலன் 
Published on
Updated on
1 min read

அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். மலையாளத்தில் நிவின்பாலியுடன் நடித்தார். தற்போது தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் இணைய உள்ளார். இதில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

சமீபத்தில் ஆங்கில இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அதிதி பாலன் கூறியதாவது: 

நான் வழக்கறிஞர், சமூக சேவகர் என்பதால் சீரியஸான ஆள் கிடையாது. பழகுவதற்கு எளிமையான நபர்தான். எந்த விஷயம் குறித்தும் என்னிடம் பேசலாம். அருவி படத்திற்குப் பிறகு நீண்ட காலம் விடுப்பு தானாக எடுக்கவில்லை. அமைந்துவிட்டது. அருவி படத்திற்குப் பிறகு எனக்கு சீரியஸான கதைகளும் பெண் மையக் கதாபாத்திரங்களும் அதிகமாக வந்தது. ஒரே மாதிரி இருக்கிறதென நான் தேர்ந்தெடுக்கவில்லை. சில படங்கள் வேறு சில காரணங்களால் தள்ளிப் போனது.

தற்போது தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நடித்து வருகிறேன். நல்ல அனுபவம். பாராதிராஜா உடன் நடித்தது நல்ல அனுபவம். தற்போது பரதநாட்டியம் பயின்று வருகிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com