மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ்  - துருவ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து பெயர்ப் பெற்றார்.

துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தூத்துக்குடியில் துவங்க உள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகளை மாரி செல்வராஜ் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com