மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

டிமான்டி காலனி - 2 படத்தின் முதல் பார்வை நாளை வெளியீடு!

டிமான்டி காலனி - 2 படத்தின் முதல் பார்வை நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2023, 2:08 pm

டிமான்டி காலனி - 2 படத்தின் முதல் பார்வை நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமான்டி காலனி - 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறையவடைந்து, தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

டிமான்டி காலனி - 2 படத்தின் முழு உரிமையையும் பாபி பாலச்சந்திரனின் பிடிஜி  யுனிவர்சல்(BTG Universal) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தற்போது,  இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை மாலை 05.01 மணிக்கு டிமான்டி காலனி 2 படத்தின் முதல்பார்வை வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.