மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கங்கனாவின் சந்திரமுகி தோற்றம் வெளியீடு

சந்திரமுகி 2 படத்தில் கங்கனாவின் சந்திரமுகி தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2023, 3:20 am

DIN

சந்திரமுகி 2 படத்தில் கங்கனாவின் சந்திரமுகி தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் சந்திரமுகி. தற்போது இதன் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது. இதனையும் முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இயக்குகிறார். மேலும் படத்தில் கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு ஆகியோர் டப்பிங் முடித்ததாக படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது. 

படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. ஏற்கெனவே படத்தில் ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திர தோற்றம் கடந்த 31ஆம் தேதி வெளியான நிலையில் இன்று கங்கனாவின் சந்திரமுகி தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.