விஷாலைப் பொறுக்கி என்றதற்காக... மனம் திறந்த மிஷ்கின்!

நடிகர் விஷால் குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.
விஷாலைப் பொறுக்கி என்றதற்காக... மனம் திறந்த மிஷ்கின்!

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவான ‘அடியே’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “நடிகர் விஷாலை ஒருமுறை பொறுக்கி எனக் கூறிவிட்டேன். அதற்காக, பலரும் அதை மீண்டும்  மீண்டும் நினைவுப்படுத்தி வருகின்றனர். விஷாலும்  அவருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி வருகிறார். நான் அப்படி என்ன துரோகத்தை செய்தேன் எனத் தெரியவில்லை. நாங்கள் சண்டை போட்டது உண்மைதான். என்னைவிட விஷாலுக்கு ஆணவம் அதிகம். அதைத் தவிர்க்க வேண்டும். ஆனாலும், விஷால் இனிமையானவர். இப்படிச் சொல்வதால் நான் அவரிடம் வாய்ப்பு கேட்பதாகக் கூறுவார்கள். இனி ஒருபோதும் விஷாலுடன் இணைய மாட்டேன். இப்போதும், நான் விஷாலை மிஸ் பண்ணுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

துப்பறிவாளன் - 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகளால் விஷால் அதிக பணத்தை இழந்ததாகவும் அதனாலேயே மிஷ்கினுக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com