பாலிவுட் நடிகை வாமிகா கபி தமிழில் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ படத்தில் நடித்திருந்தார்.
ஹிந்தி, பஞ்சாபி மொழி படங்களில் அதிகம் நடித்து வரும் வாமிகா சமீபத்தில் அமேசானில் வெளியான ‘ஜூப்ளி’ இணையத் தொடரில் அற்புதமாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். சோனி லைவிலும் ‘சார்லி சோப்ரா’ எனும் புதிய தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இதையும் படிக்க: விரைவில் அயலான் டீசர்!
தற்போது ஜெயம் ரவியுடன் ‘ஜீனி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துள்ள ‘இரவாக்காலம்’ படம் வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில், தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகன் வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி தயாரிப்பில் காளீஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க்கடனை முழுவதும் ரத்து செய்ய வலியுறுத்தி மலை மாவட்ட விவசாயிகள் சங்க கண்டனக் கூட்டம்

புதுச்சேரி ஜிப்மரில் இளைஞரின் உறுப்புகள் தானம்

ரோஹிணி: ஹோட்டல் சமையலறையில் தீ விபத்து

கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



