கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜெயிலர் - முதல்நாள் பிரம்மாண்ட வசூல் சாதனை!

ஜெயிலர் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2023, 5:38 am

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலைக் காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மேலும், உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இந்நிலையில், முதல்நாளில் தமிழகத்தில் ரூ.29.46 கோடியையும் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.12.04 கோடியையையும் கர்நாடகத்தில் ரூ.11.92 கோடி, கேரளத்தில் ரூ.5.38 கோடி, வெளிநாடுகளில் ரூ.32.75 கோடி என ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், 2023 ஆம் ஆண்டில் பிரம்மாண்ட துவக்கத்தைக் கொடுத்த திரைப்படமாக ஜெயிலர் உருமாறியுள்ளது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.