நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வைரலாகும் சூர்யாவின் சிக்ஸ் பேக் புகைப்படம்! 

கங்குவா படத்தின் படக்குழு வெளியிட்ட நடிகர் சூர்யாவின் சிக்ஸ் பேக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2023, 6:38 am

DIN

அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார்.

Story image

இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடராஜ் நடித்து வருவதாகவும் தகவல். படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்க உள்ளது.

முன்னதாக, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் க்ளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டிருந்தனர். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த டீசர் இதுவரை யூடியூப்பில் 3.3 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

Story image

இந்நிலையில் படக்குழு வெளியிட்ட சூர்யாவின் சிக்ஸ் பேக் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Story image

நடிகர் சூர்யா வாரணம் ஆயிரம், கஜினி, அயன் என பலப் படங்களில் சிக்ஸ் பேக் வைத்திருப்பார். இருப்பினும் மீண்டும் கங்குவா படத்திற்காக இதை செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.