விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி: எங்கு, எப்போது? டிக்கெட் விலை எவ்வளவு? 

விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி: எங்கு, எப்போது? டிக்கெட் விலை எவ்வளவு? 

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. 
Published on

தமிழில் 2005இல் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. டிஸ்யூம், நான் அவனில்லை, நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், காதலில் விழுந்தேன், வேலாயுதம் என பல வெற்றிப் பட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 

தற்போது நடிகராகவும் இயக்குநராகவும் அவதாரமாக எடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் பிச்சைக்காரன் 2 வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. 

பல்வேறு இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்ச்சிகளை நடத்திவரும் நிலையில் விஜய் ஆண்டனியும் சென்னையில் வரும் செப்.9ஆம் நாள் ஒய்எம்சிஏ நந்தனம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

டிக்கெட்டுக்கான இணையதள முகவரியை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிக்கெட்டுக்கான விலை ரூ.1500 முதல் ரூ.25000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com