மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நகைச்சுவை புரியவில்லை எனில் நீங்கள்தான் நகைச்சுவையே: சந்திரயான் பதிவிற்கு பிரகாஷ் ராஜ் விளக்கம்!

நடிகர் பிரகாஷ் ராஜ் தான் பதிவிட்ட சந்திரயான் குறித்த பதிவிற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

News image
Updated On :21 ஆகஸ்ட் 2023, 3:40 pm

நிலவில் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-3 விண்கலம், ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. தற்போது நிலவையொட்டிய சுற்றுப்பாதையில்  லேண்டர் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

சந்திரயான் அனுப்பிய படம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டலாக டீ பதிவிட்டு இருந்தார். விக்ரம் லேண்டர் எடுத்த முதல்படம் என டீ ஆத்தும் புகைப்படம் ஒன்றினை கிண்டலாக பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க அதற்கு விளக்கமளித்துள்ளார். 

Story image

இதில், “வெறுப்பு வெறுப்பினை மட்டுமே பார்க்கும். ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவையினை கூறியிருந்தேன். கேரள டீக்கடைகாரரை கொண்டாடியுள்ளேன்... எந்த டீ விற்பவருக்கு இது கேலியாக தெரிகிறது? நகைச்சுவை புரியவில்லை என்றால் நீங்கள்தான் நகைச்சுவையே. வளருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 

Story image

பிரகாஷ் ராஜ் தற்போது தெலுங்கில் குண்டூர் காரம், புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.