சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இறுகப்பற்று படக்குழு வெளியிட்ட வித்தியாசமான ப்ரோமோ விடியோ!

நடிகர்கள் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள இறுகப்பற்று படத்தின் புதிய ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. 

News image
Updated On :21 ஆகஸ்ட் 2023, 2:55 pm

DIN

பிரபல கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி படத்தினை இயக்கியவர் யுவராஜ் தயாளன். பின்னர் வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கி மக்களிடையே கவனம் பெற்ற யுவ்ராஜ் தயாளன் தற்போது அவருக்கு வித்தியாசமான கதைக்களத்தில் படத்தினை இயக்கியுள்ளார். 

நடிகர்கள் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும் நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானிய ஐயப்பான் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த 3 ஜோடிகளின் காதல் கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குநர் யுவராஜ் தயாளன். 

நடிகர் விக்ரம் பிரபுவின் பொன்னியி செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடயே நல்ல கவனம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் வித்தார்த் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே நடித்து வருகிறார். வழக்கு என் 18/9 இல் அறிமுகமாகி லோகேஷின் மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீ பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படமாக இறுகப்பற்று படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Story image

எஸ் ஆர்பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் பாபு, பி கோபிநாத், தங்கபிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தினை பொடென்சியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி வழங்குகிறது. இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல்கள் எழுதியுள்ளார். 

YouTube video thumbnail

இறுகப்பற்று படத்தின் புதிய ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.