கிங்க் ஆஃப் கோதா - சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘கிங்க் ஆஃப் கோதா’ திரைப்படத்தில் பிரபல நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிங்க் ஆஃப் கோதா - சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்!

நடிகர் துல்கர் சல்மான், அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் ’கிங் ஆஃப் கோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சார்பட்டா பரம்பரை புகழ் டேன்ஸிங் ரோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரசன்னா, செம்பன் வினோத், அனிகா சுரேந்திரன் என பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. நாளை மறுநாள்(ஆக.24) ஓணம் வெளியீடாக  தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகிறது. 

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com