அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

மை 3 - தொடரின் முதல்பார்வைப் போஸ்டர் வெளியீடு!

சாந்தனு, ஹன்சிகா நடிப்பில் உருவான ‘மை 3’ தொடரின் முதல்பார்வைப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 6:04 pm IST

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், “மை3”  இணையத் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது

இந்தத் தொடரில் முன்னணி நட்சத்திரங்களான ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர் 

'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற காமெடி பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய,  பிரபல இயக்குநர்  ராஜேஷ்.எம் இந்த “மை3” தொடரை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்தத் தொடர் உருவாகியுள்ளது. 

இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ்  - எடிட்டிங்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” தயாரிப்பை டிரண்ட்லௌட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

Story image

“மை3” டைட்டில் அறிவிப்பை ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ் இணைந்து பிக்பாஸ் ஹவுஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

“ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகை ஹன்ஷிகா மோத்வானி இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து இந்த வெப் சீரிஸில் பணிபுரிந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.