ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புர்ஜ் கலிஃபாவில் ஜவான் பட டிரைலர்: ஷாருக்கான் அறிவிப்பு! 

உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஜவான் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 3:58 pm

DIN

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Story image

இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் 3வது பாடலான ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் நாளை வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

Story image

இந்நிலையில் ஆக.31ஆம் நாள் மாலை 9 மணிக்கு ஜவான் படத்தின் டிரைலர் வெளியாகுமென ஷாருக்கான் அறிவித்துள்ளார். மேலும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஜவான் படத்தின் டிரைலர் திரையிடப்படுமென கூறியுள்ளார். 

இசை வெளியிட்டு விழா எப்போதென இன்னும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.