சின்னத்திரை நடிகை ஸ்வாதி ஷர்மா புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் அறிமுகமாகி மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை ஸ்வாதி ஷர்மா.
கர்நாடக சினிமாவில் நடித்துவந்த இவர், 2021ஆம் ஆண்டுமுதல் சின்னத்திரையில் நடித்து வருகிறார். கன்னட சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார்.
எனினும் 2021 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் தொடர் மூலம் பல தமிழ் ரசிகர்களைப் பெற்றுள்ளார். ஸ்வேதா நடித்துவரும் பொன்னி கதாபாத்திரம் பலரைக் கவர்ந்துள்ளது. இந்தத் தொடரில் ஆனந்த் செல்வம், ஸ்வாதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அவ்வபோது புதிய புகைப்படங்களைப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருபவர் ஸ்வாதி ஷர்மா. தற்போது தனது சொந்த உழைப்பின் மூலம் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை ரசிகர்களுடம் புகைப்படம் வாயிலாக சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

என்னை மனித இயந்திரமாக மாற்றியவர்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். காரை தனது குடும்பத்துக்கு வரவேற்கும் அவர், என் தகுதி என்ன என்று எனக்கு உணர வைத்த அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்திரை பிரலங்கள், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காப்புக்காட்டில் நாளை தொல்காப்பியா் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


